சர்வதேச முதியோர் தின வைபவம் மற்றும் போட்டிகள்
மேல் மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களம் மேல் மாகாணத்தில் வாழும் முதியோர் நலனுக்காக செயல்படும் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
சிரேஷ்ட பிரஜைகளின் தங்கியிருப்போர் என்ற எண்ணத்தினை அகற்றி வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மற்றும் சுயசக்கதியுடன் எழுந்து நிற்பதற்கு சந்தர்ப்பத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்காக மற்றும் அவர்களின் நலன்புரி செயற்பாட்டிற்காக எங்களது தாபனத்தின் மூலம் தற்போது பல நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டுள்ளன.
சமூக விழுமியங்கள் மற்றும் சமூக பெறுமதிகள் தொடர்பான பொறுப்புக்கள் இழக்கும் காலத்தில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புகளின் மூலம், முதியவர்களின் பாரம்பரிய குணங்களையும் அறிவையும் பெற வேண்டிய அவசியம் காலத்தின் தேவையாக உள்ளது.
மேற்கண்ட குறிக்கோள்களை அடைவதற்கும், அவர்களை பாராட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும், 1000 முதியோர்களின் பங்கேற்புடன் மாகாண முதியோர் தின கொண்டாட்டம் 2019.09.30 அன்று காலை 8.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறே சர்வதேச முதியோர் தினம் – 2019 க்கு இணையாக வயதுவந்தோர்களுக்கான போட்டிகளை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
- நோக்கம்
- மேல் மாகாணத்தில் வாழும் முதியோருக்கான வாய்ப்புகளை விஸ்தரித்தல்.
- முதியவர்களின் இலக்கிய திறன்கள், அறிவு மற்றும் திறமைகளை வெளிப்படுத்துதல்.
- முதியவர்களின் மன நலனை மேம்படுத்துதல்.
- முதியோர் குழுக்கள் மற்றும் வாரியங்களுக்கிடையில் நல்லுறவை ஊக்குவித்தல்
- முதியோர் வாரியங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வது மற்றும் அதிகாரப்படுத்துதல்.