மேல் மாகாணத்திலுள்ள விஷேட தேவையுடையவர்களின் கலாசார கலை அழகியல் நிகழ்ச்சிப் போட்டிகள்
விஷேட தேவையுடையவர்களின் கலையும் கலாசாரமும் சார்ந்த திறன்களை வெளிப்படுத்தச் செய்வதையும், அத்தகைய திறன்களை விருத்தி செய்வதையும், சமூக ரீதியில் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும், உடலியல் குறைபாடு, இயலாமை அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்துவதையும் இலக்காகக்கொண்டு மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் வருடாந்தம் நடத்தப் படும் மாகாண கலாசார கலை அழகியல் நிகழ்ச்சிப் போட்டி “தடைகளை உடைத்து எறிந்து உலகத்தை வெல்ல வித்தியாசமான திறன்களை” வெளிப்படுத்துவோம் எனும் தலைப்பில் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி பத்தரமுல்ல ஸ்ரீ சுகுத்தி விளையாட்டு மைதானத்தில் மேல் மாகாண கௌரவ ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலகாலமாக நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் விஷேடதேவையுடைய 400 விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்குபற்றினர்.