மேல் மாகாணத்திலுள்ள விஷேட தேவையுடையவர்களின் விளையாட்டுப் போட்டி
மேல் மாகாணத்திலுள்ள விஷேட தேவையுடையவர்களின் விளையாட்டுத் திறன்களை இனங்கண்டு அவர்களின் உள வலிமையை வளர்த்து அவர்களுக்கு பயனுள்ள சிறந்த ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொருட்டு திறன்கள் விருத்தி, தலைமைத்துவம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, நட்பு, பொறுமை, ஒற்றுமை முதலிய பன்புகளை வளர்த்து நல்லொழுக்கம் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் மேல் மாகாண விஷேட தேவையுடையவர்களின் மெய் வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் ஏழாவது தடைவையாகவும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலகாலமாக நடத்தப்பட்டன.
மாகாண மட்டப் போட்டிகளுக்கு 650 வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். போட்டியில் வெற்றி பெற்ற அந்த வீர வீராங்கனைகளுக்கு தங்கப் பதக்கங்களும், வெள்ளிப் பதக்கங்களும், வெங்கலப் பதக்கங்களும், அதே நேரம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வயதுப் பிரிவு
- 12 வயதினை விட குறைந்த முன் கனிஷ்டதொகுதி
- 12 வயதினை விட கூடிய 15 வயதினை விட குறைந்த கனிஷ்ட தொகுதி
- 15வயதினை விட கூடிய 18 வயதினை விட குறைந்த சிரேஷ்ட தொகுதி
- 18 வயதினைவிட கூடிய சிரேஷ்ட தொகுதி
- திறந்த தொகுதி (வயது எல்லை இல்லை)
அங்கவீனத்தின் வகை
- முழுமையாக பார்வை தெரியாத (B1)
- ஒரளவு பார்வை தெரிந்த (B2)
- கேட்கும் திறனற்ற / பேச்சுத் திறனற்ற (DEAF)
- மந்த புத்தி (MR)
- உளவியல்நோய் ( 18 வயதினை விடக் கூடிய)
- ஒட்டிசம் (Auti)
- இடுப்புக்புகீழ் இயங்காத , ஒரு பாதம் இல்லாத மற்றும் மற்றய கால் இயங்காத , இரண்டு கால்களும் இல்லாத.
- ஒரு கால் முழங்காலுக்கு மேலே இல்லாத (A/K)
- ஒரு கால் முழங்காலுக்கு கீழே இல்லாத (B/K)
- முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களும் இல்லாத (W/K)
- ஒரு கால் மட்டும் இயங்காத (O/L)
- ஒரு கை முழங்கைக்கு கீழ் அல்லது மேல் இயங்காத (O/H)
- இரண்டு கைளும் முழுமையாக இல்லாத அல்லது இயங்காத (W/H)
- இளம் பிள்ளைவாதம் ( POLI )
- உடலின் உயரம் 145 சென்ரி மீற்றருக்கு குறைந்த நபர்கள் (DWA) ( 18 வயதினை விட கூடியவர்களுக்கு மட்டும்)
2019 மேல் மாகாண விஷேட தேவைகள் உள்ளவர்களின் விளையாட்டுப் போட்டி
மேல் மாகாணத்தில் விஷேட தேவைகளைக் கொண்ட நபர்களின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களின் மன உறுதியை மேம்படுத்தி பயனுள்ள வாழ்க்கை முறை ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கா கொள்ளளவு அபிவிருத்தி, தலைமைத்துவம், சகிப்புத்தன்மை, ,நட்புறவு, பொறுமை, குழுப்பணி போன்ற குணாதிசயங்களை மேம்படுத்தி முழுமையான சமூகத்தினை வெ ளிப்பாட்டினை வெளிக்கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு மேல் மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களம் வருடாந்தம் ஒழுங்கு செய்கின்றது. மேல் மாகாணத்தின் விஷேட தேவைகள் உள்ளவர்களின் மெய் வல்லுனர் போட்டி ஏழாவது முறையாக மாகாணப் போட்டிகள் 2019 யூலை மாதம் 25 ஆந் திகதி சுகததாச விளையாட்டரங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது