மதுர சிறுவர் வழிகாட்டல் நிலையத்தினை நிர்மாணிகும் செயற்றிட்டம்

நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில்  அங்கவீனர்களின் பாரிய பிரச்சினை மற்றும்  சிக்கல்களுக்காக வழிகாட்டல்  வசதிகளை  மீள் அமைப்பது  அத்தியாவசியமானதாகும். எனவே களுத்துறை மாவட்டத்தின்  மத்துகம  வத்தாவ மட்டுப்படுத்தபட்ட கூட்டுறவு சங்கத்திற்குரிய விஷேட அங்கவீன் பிள்ளைகளின்  வீடமைப்பு சூளலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பௌதீக சிகிச்சை நிலையத்தின்  விசேட வளத்தினை கருத்தில்கொண்டு  சிறுவர் வழிகாட்டல்  நிலையமாக அபிவிருத்தி செய்வது மிகவும் பொருத்தமானதாகும் .

நம் நாட்டில் வாழும் ஊனமுற்ற சமூகத்துடன் ஒப்பிடுகையில்,மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம்  2000 களில் தொடங்கிய, கொழும்பு நவின்னாவின பாத்திரகோடாவில்  அமைந்துள்ள குழந்தை வழிகாட்டுதல் மையம் இரத்தினபுரி சிறுவர் வழிகாட்டல் இல்லத்தைத் தவிர ஏனைய மாவட்டங்களில் இந்த தாபனம் விஸ்தரிக்கப்படவில்லை எனினும் அதன் தேவைகள் அதிகமாகும். மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகியவற்றில்  எதிர்காலத்தில்  வழிகாட்டல் மையங்களைத் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்படுக் கொண்டிருகின்றன. விஷேடமாக  களுத்துறை மாவட்டத்தில் குறித்த பௌதீக சிகிச்சை நிலயத்தினை அடிப்படையகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட சிறுவர்  வழிகாட்டல் நிலையம் நிமாணிக்கப்படவுள்ளது..

நிலையம் – கழுத்துறை மாவட்டத்தின்  மத்துகம்  வத்தாவ மட்டுப்படுத்தபட்ட கூட்டுறவு சங்கத்திற்குரிய விஷேட அங்கவீன பிள்ளைகளின்  வீடமைப்பு சூளல்.

நோக்கம் – ஊனமுற்ற சமூகத்தின் உடல், மன, சுகாதாரம் மற்றும் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக நலனை மேம்படுத்துதல். குறிப்பாக பிறப்பு முதல் ஐந்து வயது வரை ஊனமுற்ற குழந்தைகளின் கூடிய சதவீதத்தை குறைத்தல்.அவர்களை பொதுவாக முன்பள்ளிகளுக்கு அனுப்பி  குழந்தை பருவத்தை மேம்படுத்தல்.பொதுவான பாடசாலை . கல்வியின் சதவீத்த்தை அதிகரித்தல். விஷேட தேவைக் கேற்ப சிறப்புக் கல்விக்கு பரிந்துரைத்தல். உடல் அவயங்களுக்காக இயற்பியல் சிகிச்சை, உடல் சிகிச்சை, பேச்சு சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு  அங்கவீனத்தினைக் குறைத்தல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சிகளுக்கு அனுப்புதல், அவர்களை வருமானம் உழைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துல்.பொருளாதார  அபிவிருதியின் ஊடாக  சுயசக்தியில் எழுந்து நிற்கக்கூடிய ஒரு தன்னம்பிக்கை சமூகமாக மாற்றுவது நோக்கமாகும்.

சமூக பலாபலன்கள்

  • அதிகமாகக் காணப்படும்  அங்கவீன சமூத்தினை குறைத்தல்..
  • அங்கவின பிள்ளைகளின்  கல்வி நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துதல்.
  • அங்கவீன் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
  • சமூகம் என்றரீதியில் ஏற்க்கொள்ளலை உருபாக்கல்.
  • தங்கி வாழும் மன நிலமையினை குறைத்தல்.
  • ஊனமுற்றோர் சமூகத்தின் பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்ளல்.
  • வறுமையினைக் குறைத்தல் .
  • தொழிலின்மையினைக் குறைத்தல்.